×

உக்ரைனை விட்டு ஓட்டமா என்ற தகவலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு.. இறுதிவரை ரஷியாவுடன் போராடப் போவதாக ஆவேசம்!!

கீவ் : ரஷிய படையெடுப்பால் உக்ரைனை விட்டு தப்பி ஓடிவிட்டதாக பரவிய தகவலை மறுத்து அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். தலைநகர் கீவ்வில் உள்ள அதிபர் மாளிகை முன்பு நின்று கொண்டு அந்த வீடியோவை ஜெலன்ஸ்கி பதிவு செய்துள்ளார். அவருடன் உக்ரைன் பிரதமர், ராணுவ தளபதி உள்ளிட்ட அரசு பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள் இருந்தார்கள். உக்ரைனை விட்டு எங்கும் போகப் போவதில்லை. ரஷியாவுக்கு எதிராக இறுதிவரை உறுதியுடன் போரிடப் போவதாக அவர் சூளுரைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நாங்கள் அனைவரும் இங்கே உள்ளோம். எங்கள் ராணுவம் இங்கே உள்ளது. எங்கள் நாட்டையும் சுதந்திரத்தையும் காத்துக் கொள்ள உறுதியுடன் போராடுவோம்.கடைசி வரை இங்கேயே இருப்போம், என்றார்.

இந்த நிலையில் உக்ரைனில் 3வது நாளாக உக்கிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா தலைநகர் கீவ்வை சுற்றி வளைந்துள்ளது. ரஷிய படைகள், கீவ் நகருக்குள் நுழைந்ததும், அடுத்தடுத்து 3 குண்டுகள் வீசும் சட்டம் அங்கு கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அங்கு துப்பாக்கிச் சண்டையும் நடந்துள்ளது. ரஷிய படைகள் தலைநகருக்குள் நுழைந்துள்ளதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தி உள்ளார். கீவ் நகரில் வான் தாக்குதல் சைரின்கள் நுழைந்தன. அனைத்து ரஷியப்படைகளும் அதிபர் மாளிகையை நோக்கி செல்வதாக சொல்லப்படுகிறது. தலைநகர் கீவ்வில் உள்ள வடக்கு மாவட்டங்களிலும் ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ளன. சில நாட்களிலேயே கீவ் நகரம் ரஷியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்று அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. ரஷியாவின் வான் தாக்குதலில் 25 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டன. 100க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர் என்ற புள்ளி விவரத்தை ஐ.நா.சபை வெளியிட்டுள்ளது.


Tags : President Gelensky ,Ukraine , Ukraine, President, Zhelensky, Denial, Russia
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி